தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றிய அண்ணாமலை, பாஜகவில் இருந்து விலக இருப்பதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் தனது அடுத்தக்கட்ட அரசியல் தொடர்பான முடிவை இன்று மதியம் அவர் அறிவிக்கவுள்ளார்.
அண்ணாமலை, தனிக்கட்சி ஒன்றை புதிதாக தொடங்க இருப்பதாகவும், அது மதசார்பற்ற கொள்கை கொண்ட கட்சியாகவும் இருக்கும் என்றும் தெரிவிக்ககப்படுகிறது.
தமிழ்நாட்டை அடிப்படையாக வைத்து இயங்கக்கூடிய கட்சியாகவும் இருக்கும் என்றும், முழுமையாக இளைஞர்களை மையப்படுத்தியே அந்த கட்சி செயல்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந்த நிலையில், நேற்று அவர் தமது சமூக வலைதளத்தில்,
”நாளைய தினம் (05) மதியம் 12 மணி அளவில், சமூக வலைத்தளங்கள் மூலம் உங்கள் அனைவரையும் சந்தித்து, கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும், மனம் திறந்து உரையாடவும், ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன்.”
எனக் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, அவர் புதிய கட்சி தொடர்பான அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


