Sunday, June 7, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்டெல்லி உணவு விடுதியில் தீ விபத்து: 20 பேர் பலி - பலர் காயம்

டெல்லி உணவு விடுதியில் தீ விபத்து: 20 பேர் பலி – பலர் காயம்

தெற்கு டெல்லி மாள்வியா நகரில் உள்ள ஓர் உணவு விடுதியில் இன்று காலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 20 பேர் பலியாகினர்.

பலியானவர்களில் பலர் மத்திய ஆசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்தவர்கள் என தகவல் தெரிவிக்கின்றது.

அதேநேரம் பலர் காயமடைந்துள்ளனர்.

இன்று காலை சுமார் 9 மணியளவில் தெற்கு டெல்லி தீயணைப்புத் துறைக்கு, மாள்வியா நகரில் உள்ள பிரபலமான உணவு விடுதியில் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு பயணித்த 10 இற்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மூலம், நீண்ட போராட்டத்தின் பின்னர் தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments