Sunday, June 7, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்23,000 ஆசிரியர் ஆட்சேர்ப்பு குறித்து பிரதமர் தகவல்

23,000 ஆசிரியர் ஆட்சேர்ப்பு குறித்து பிரதமர் தகவல்

ஆசிரியர் ஆட்சேர்ப்பு தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பின் பிரகாரம், 23,000 ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அனுமதி கிடைத்துள்ளதாக கல்வி உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

மேல் மாகாண தேசிய பாடசாலை அதிபர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்திஇ அவர்களது திறன்களை மேம்படுத்தும் நோக்கில், ஜூன் 02 ஆம் திகதி கல்வி அமைச்சில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோது பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டின் இறுதிக்குள் குறித்த ஆட்சேர்ப்புகள் இடம்பெறும் எனத் தெரிவித்த பிரதமர், இதன் மூலம் 2027 ஆம் ஆண்டளவில் ஆசிரியர் வெற்றிடங்களை கணிசமாகக் குறைக்க முடியும் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள பாடசாலை உட்கட்டமைப்பு மற்றும் சுகாதார வசதிகளை அபிவிருத்திச் செய்யும் வேலைத்திட்டங்களை விரைவாக நிறைவுசெய்து மாணவர்களின் பயன்பாட்டிற்குக் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 2027 ஆம் ஆண்டிலிருந்து புதிய பாடசாலை அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments