அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்டு டிரம்ப், அமெரிக்காவில் அகதிகள் குடியேற்றத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கான நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார். அதன்படி வருகிற 27-ந்தேதிக்கு பிறகு அகதிகள் வருகைக்கு தடைவிதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த காலக்கெடுவுக்கு முன்னதாக அமெரிக்காவுக்குள் நுழைய முறையான அனுமதிப் பெற்ற அகதிகள் அமெரிக்கா செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட அகதிகளின் பயணத்தை டிரம்ப் நிர்வாகம் ரத்து செய்துள்ளது. அமெரிக்காவிற்கான அகதிகள் வருகை மறு உத்தரவு வரும் வரை இடைநிறுத்தப்படுவதாக டிரம்ப் நிர்வாகம் அறிவித்தது.
அமெரிக்காவில் ஜன.27-ந்தேதிக்கு பிறகு அகதிகள் வருகைக்கு தடை
RELATED ARTICLES
Recent Comments
Hello world!
on