Sunday, April 20, 2025
spot_img
Homeஇந்திய செய்திகள்மூத்த எழுத்தாளர்களுக்கு வள்ளுவர் விருது வழங்கி திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கம் கொளரவிப்பு

மூத்த எழுத்தாளர்களுக்கு வள்ளுவர் விருது வழங்கி திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கம் கொளரவிப்பு

திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கம் நடத்திய பொங்கல் திருநாள் மற்றும் மூத்த எழுத்தாளர்களுக்கு வள்ளுவர் விருது வழங்கும் விழா 21-01-2025 அன்று திருச்சிராப்பள்ளித் தமிழ்ச்சங்கம் குளிர்மை சிற்றரங்கில் சிறப்பாக நடைபெற்றது.

திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கம் சிறப்புத் தலைவர் செளமா.இராஜரத்தினம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் . செயலாளர் நந்தவனம் சந்திரசேகரன் முன்னிலை வகித்தார். பொதுச்செயலாளர் வை. ஜவஹர் ஆறுமுகம் அறிமுக உரையாற்ற, திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கத் தலைவர் கவிஞர் த. இந்திரஜித் வரவேற்புரையாற்றினார்.

சிறப்பு விருந்தினராகக்கலந்து கொண்ட வரலாற்று ஆய்வாளர். கவிஞர் ஜீவபாரதி திருச்சி மாவட்டத்தின் மூத்த எடுத்தாளர்கள் திருக்குறள். சு.முருகனந்தம், திருக்குறள் புலவர் நாவை சிவம், கவிஞர் மணமேடு குருநாதன், எழுத்தாளர் மழபாடி ராஜாராம் ஆகியோருக்கு வள்ளுவர் விருது வழங்கிச் சிறப்பித்தார்.

திருச்சிராப்பள்ளித் தமிழ்ச்சங்க அமைச்சர் பெ. உதயகுமார், பத்ம ஸ்ரீ மா.சுப்ராமன், கவிஞர் வி. கோவிந்தசாமி, திருச்சிமா வட்ட எழுத்தாளர் சங்க துணைத்தலைவர் சூர்யா சுப்ரமணியன், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

நிறைவாக அமிர்தம் சமூக நல அறக்கட்டளைத் தலைவர் யோகா விஜயகுமார் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார் கவிஞர் ஆங்கரை பைரவி நிகழ்வைத் தொகுத்து வழங்கினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments