Thursday, July 23, 2026
spot_img
Homeஉலக செய்திகள்சிறுவர் துஷ்பிரயோகக் காட்சிகளைக் கண்டறிய AI தொழில்நுட்பம்!

சிறுவர் துஷ்பிரயோகக் காட்சிகளைக் கண்டறிய AI தொழில்நுட்பம்!

இணையவழியில் சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகங்களைத் தடுக்கவும்,  பாதிக்கப்பட்ட குழந்தைகளை விரைவாகக் கண்டறியவும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த லண்டன் மெட்ரோபொலிட்டன் காவல்துறை (Met Police) திட்டமிட்டுள்ளது.

கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 5, 400-க்கும் மேற்பட்ட சிறுவர் பாலியல் துஷ்பிரயோகக் குற்றங்களை மெட்ரோபொலிட்டன் காவல்துறை விசாரித்துள்ளது.

இதில் 1,300-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு அவசரப் பாதுகாப்புத் தேவவை என்பதுடன் தற்போது இங்கிலாந்து முழுவதும் பதிவாகும் இது போன்ற வழக்குகளில் 12 சதவீதத்தை இந்த ஒரு பிரிவு மட்டுமே கையாண்டு வருகிறது.

அத்துடன், தற்போது, காவல்துறையினர் மிகவும் கொடூரமான மற்றும் மனவேதனையளிக்கும் அத்தகைய காணொளிகளையும் படங்களையும் நேரடியாகப் பார்த்து,  அவற்றின் தீவிரத்தை (Category A, B, C என) வகைப்படுத்த வேண்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை இந்த புதிய AI முறையைப் பயன்படுத்துவதன் மூலம்,

குற்றக் காட்சிகளை அதிகாரிகள் நேரடியாகப் பார்க்கும் நேரம் கணிசமாகக் குறைதல், புதிய மற்றும் அடையாளம் தெரியாத பாதிக்கப்பட்ட குழந்தைகளை மிக விரைவாகக் கண்டறிய முடிதல்

விசாரணைக்கும் தற்காப்பு நடவடிக்கைக்கும் இடைப்பட்ட கால அவகாசம் குறைக்கப்படும் என எதிர்பார்க்ப்படுகிறது

இது குறித்துத் துணை ஆணையர் மேட் ஜூக்ஸ் (Mad Zooks) கூறுகையில்,  ‘இந்தத் தொழில்நுட்பம் அதிகாரிகளின் மன அழுத்தத்தைக் குறைப்பதோடு, பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவான நீதியைப் பெற்று , ஒவ்வொரு விசாரணையின் மையப்புள்ளியாக மனிதத் தீர்ப்பு, முறையான மேற்பார்வை மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் மீதான அக்கறை ஆகியவையே இருக்கும்’ என்று தெரிவித்தார்.

தற்போது,  இந்தத் தொழில்நுட்பத்தை உருவாக்குவது தொடர்பாகப் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களுடன் காவல்துறை பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதன் மூலம் அதிகாரிகள் அத்தகைய கொடூரமான காட்சிகளுக்கு ஆட்படாமல்,  குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments