Sunday, April 20, 2025
spot_img
Homeஇலங்கை செய்திகள்சம்பூரில் இலங்கை மின்சார சபை மற்றும் இந்திய நிறுவனம் ஒன்றிணைந்து சூரிய சக்தி மின்நிலையம் ஸ்தாபிக்கப்படும்...

சம்பூரில் இலங்கை மின்சார சபை மற்றும் இந்திய நிறுவனம் ஒன்றிணைந்து சூரிய சக்தி மின்நிலையம் ஸ்தாபிக்கப்படும் – ஜனாதிபதி

சம்பூர் பகுதியில் சூரிய சக்தி மின்நிலையம் ஸ்தாபிக்கப்படும். இலங்கை மின்சார சபை மற்றும் இந்திய நிறுவனத்தை ஒன்றிணைத்து நிறுவனம் ஒன்று ஸ்தாபிக்கப்படும். இரு தரப்பினருக்கும் 50 இக்கு 50 என்ற அடிப்படையில் உரிமம் சொந்தமாகும். அடுத்த அமைச்சரவையில் அதற்கான பத்திரம் சமர்ப்பிக்கப்படும். அத்துடன் திருகோணமலை எண்ணெய் தாங்களிகளில் 61 தாங்கிகளை இந்திய கூட்டு நிறுவனத்துடன் அபிவிருத்தி செய்வதற்கு ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளோம். இந்தியா எமது நண்பன் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

களுத்துறை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (19) நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது

வங்குரோத்து நிலையில் இருந்து தனித்து, சுயாதீன முறையில் மீண்டெழ முடியாது. உலகம் முன்னேற்றமடைந்துள்ளது. ஆகவே தனித்து செயற்பட முடியாது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் வரலாற்று ரீதியில் நெருக்கமான உறவு காணப்படுகிறது. இந்தியா எம் நண்பர். இதன் காரணமாகவே ஆட்சிக்கு வந்தவுடன் இந்தியாவுக்கு சென்றேன்.

இந்திய விஜயத்தின் போது பல விடயங்கள் பேசப்பட்டன. மஹவ – அநுராதபுரம் வரையிலான புகையிரத பாதையை அபிவிருத்தி செய்வதற்கு வழங்கப்பட்ட கடனை முழுமையாக நன்கொடையாக வழங்குவதாக இந்திய விஜயத்தின் போது இணக்கப்பாடு எட்டப்பட்டது.

கிழக்கு மாகாண மக்களின் வாழ்வாதார முன்னேற்றத்துக்கு இந்திய அரசு பல நன்கொடைகளை வழங்கியுள்ளது. அவை எதிர்வரும் மாதம் முதல் அமுல்படுத்தப்படும். சக்தி வலுத்துறையில் சிக்கல் காணப்படுகிறது. சம்பூர் பகுதியில் சூரிய சக்தி மின்நிலையத்தை ஸ்தாபித்போம். இலங்கை மின்சார சபை மற்றும் இந்திய நிறுவனத்தையும் ஒன்றிணைத்து நிறுவனம் ஒன்று ஸ்தாபிக்கப்படும். இரு தரப்பினருக்கும் 50 இக்கு 50 என்ற அடிப்படையில் உரிமம் சொந்தமாகும். அடுத்த அமைச்சரவையில் அதற்கான பத்திரம் சமர்ப்பிக்கப்படும்.

1960 ஆம் ஆண்டு காலப்பகுதியில் முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க பிரித்தானியாவுக்கு சொந்தமாகவிருந்த திருகோணமலை எண்ணெய் குதங்களை இரண்டரை இலட்சம் பவுன்ஸ் கொடுத்து வாங்கினார். 99 எண்ணெய் குதங்கள் உள்ளன. அவற்றில் சுமார் 1000 மெற்றிக்தொன் எண்ணெயை களஞ்சியப்படுத்த முடியும்.இருப்பினும் அவரை இன்று பாழடைந்துள்ளது.

திருகோணமலை எண்ணெய் தாங்கிகளில் 24 குதங்கள் பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. ஐ.ஓ.சி. நிறுவனத்துக்கு 10 தாங்கிகள் வழங்கப்பட்டுள்ளன. 61 தாங்கிகள் மிகுதியாகியுள்ளன. பெற்றோலிய கூட்டுத்தாபனத்தையும், இந்திய நிறுவனத்தையும் ஒன்றிணைத்து கூட்டு நிறுவனத்தை அமைக்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. எண்ணெய் சுத்திரகரிப்புக்கான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளோம். நாட்டின் இருப்புக்காகவும், மக்களின் நலனுக்காகவும் நடவடிக்கை எடுத்துள்ளோம் என்றார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments