Thursday, March 19, 2026
spot_img
Homeஉலக செய்திகள்காபூல் தாக்குதல்!

காபூல் தாக்குதல்!

தலைநகர் காபூலில் போதைப்பொருள் பயன்படுத்துபவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை மீது பாகிஸ்தான் இராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தி குறைந்தது 400 பேரைக் கொன்றதாக ஆப்கானிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது.

எனினும் பாகிஸ்தான் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளதுடன், ஆப்கானிஸ்தானின் கூற்றானது தவறானது என்றும், அது பொது மக்களை தவறாக வழி நடத்தும் நோக்கம் கொண்டது என்றும் கூறியுள்ளது.

மேலும், திங்களன்று காபூல் மற்றும் நங்கஹார் மாகாணத்தில் உள்ள இராணுவ நிறுவல்களை மட்டுமே குறிவைத்ததாக பாகிஸ்தான் சுட்டிக்காட்டிது.

காபூலில் உள்ள உமர் போதை மீட்பு சிகிச்சை மருத்துவமனை மீதான தாக்குதல் உள்ளூர் நேரப்படி இரவு சுமார் 9 மணியளவில் (16:30 GMT) நடைபெற்றதாக ஆப்கானிஸ்தான் தலிபான் அரசாங்கத்தின் துணை செய்தித் தொடர்பாளர் ஹம்துள்ளா ஃபித்ரத்தின் கூறியுள்ளார்.

அந்த மருத்துவமனை 2,000 படுக்கைகள் கொண்ட ஒரு வளாகம் என்றும், இந்தத் தாக்குதலால் கட்டிடத்தின் பெரும் பகுதிகள் சேதமடைந்தன என்றும் அவர் எக்ஸில் கூறியுள்ளார்.

மேலும் அந்த பதிவில், தாக்குதலில் துரதிர்ஷ்டவசமாக இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 400-ஐ எட்டியுள்ளது, அதே நேரத்தில் சுமார் 250 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீட்புக் குழுவினர் தற்போது சம்பவ இடத்தில், தீயைக் கட்டுப்படுத்தவும், பாதிக்கப்பட்டவர்களின் எஞ்சிய உடல்களை மீட்கவும் பணியாற்றி வருகின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் அனைவரும் பொதுமக்கள் என்று மருத்துவமனை வட்டாரங்கள் கூறியுள்ளன.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments