நடிகர் விஜய் தனியாக தேர்தலை சந்திக்க போகிறாரா அல்லது கூட்டணி சேரப் போகிறாரா என்பது தான் தற்போது தமிழ்நாட்டின் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படும் விஷயமாக மாறி இருக்கிறது.
இந்நிலையில் இன்று விஜய் கரூர் துயர சம்பவம் தொடர்பான விசாரணைக்காக டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார். மாலையில் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதனைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் சிபிஐ அலுவலகத்திலிருந்து வெளியில் வந்த விஜய் காரின் சன்ரூஃப் வழியாக ஏறி நின்று தன்னை பார்க்க காத்திருந்த ரசிகர்களுக்கு கையை அசைத்திருக்கிறார்.
அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது.
தன்னுடைய பிரச்சாரத்திற்கு திமுக அரசு பல்வேறு தடங்கல்களை ஏற்படுத்தி வருவதாகவும், அனுமதி கொடுக்க மறுப்பதாகவும் விஜய் கட்சியினர் பல்வேறு புகார்களை கூறி வந்த நிலையில், இனி தேர்தல் ஆணையத்தின் மூலமாக அவரது பிரச்சாரத்திற்கு அனுமதி எளிதாக கிடைக்கும் என கூறப்படுகிறது. அதனால விஜய் தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரத்திற்கு செல்ல தொடங்க வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.


