Monday, March 16, 2026
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்டென்னிஸ் பட்டம் கைப்பற்றினார்!

டென்னிஸ் பட்டம் கைப்பற்றினார்!

டென்னிஸ் போட்டித் தரவரிசையில் உலகின் இரண்டாவது இடத்தில் இருக்கும் வீரரான ஜனிக் சின்னர் இண்டியன் வெல்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் மெத்வதேவ்வை வீழ்த்தி முதல் தடவையாக பட்டத்தை வென்றுள்ளார்.

இந்தியன் வெல்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்றது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டிக்கு முன்னனி வீரர்களான மெத்வதேவ் மற்றும் ஜனிக் சின்னர் ஆகியோர் தகுதிப்பெற்றனர்.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆரம்பமான குறித்த இறுதிப்போட்டியில் போட்டி தொடங்கியதிலிருந்தே இருவரும் மாறி மாறி புள்ளிகளை பெற தொடங்கினார்கள்.

மெத்வதேவ் முன்னிலைப்பெறுவதும் சின்னர் அதன்பிறகு அவரை சமன் செய்வதும் என போட்டி முதல் சுற்றிலேயே விறுவிறுப்பான கட்டத்திற்கு சென்றது. இருந்தும் போராடி முதல் செட் ஆட்டத்தை 7-6 என கைப்பற்றி அசத்தினார் ஜனிக் சின்னர்,

பின்னர் இரண்டாவது செட் ஆட்டம் தொடங்கியதும் சின்னருக்கு சவாலாக விளங்கினார் மெத்வதேவ் இருந்தும் சின்னர் வீடாது முன்னிலைப்பெற்று அசத்தினார்.

1 மணித்தியாலத்திற்கும் மேல் நீடித்த இரண்டாவது செட் ஆட்டத்திலும் 7-6 என கைப்பற்றி 7-6, 7-6 என்ற நேர் செட் கண்க்கில் மெத்வதேவை வீழத்தி முதல் முறையாக இண்டியன் வெல்ஸ் பகிரங்க டென்னிஸ் பட்டத்தை கைப்பற்றி அசத்தினார் ஜனிக் சின்னர் என்பதும் குறிப்பிடதக்கது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments