ஈரானுக்கு எதிரான நடவடிக்கையில் பங்கேற்ற அமெரிக்க இராணுவ எரிபொருள் நிரப்பும் விமானம் ஈராக்கில் விபத்துக்குள்ளானதாகவும், தற்சமயம் மீட்பு பணிகள் நடந்து வருவதாகவும் அமெரிக்க மத்திய கட்டளை வியாழக்கிழமை (13) தெரிவித்துள்ளது.
இந்த விபத்தில் ஏதேனும் உயிரிழப்புகள் ஏற்பட்டதா என்பது குறித்து உடனடியாகத் தெரியவில்லை.
விபத்துக்குள்ளான KC-135 விமானத்தில் குறைந்தது ஐந்து பணியாளர்கள் இருந்ததாக அமெரிக்க அதிகாரி ஒருவர் சர்வதேச ஊடகங்களிடம் உறுதிபடுத்தியுள்ளார்.
இந்த விபத்து விரோதமான துப்பாக்கிச் சூட்டினாலோ அல்லது தவறான துப்பாக்கிச் சூட்டினாலோ நிகழ்ந்ததல்ல என்றும் அமெரிக்க இராணுவம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதேநேரம், ஈராக்கில் இயங்கும் ஈரான் ஆதரவு பெற்ற இஸ்லாமியக் குழு ஒன்று விமானத்தை வீழ்த்தியதற்குப் பொறுப்பேற்றுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
KC-135 நீண்ட தூர பயணங்களின் போது போர் விமானங்கள் மற்றும் பிற விமானங்களுக்கு எரிபொருள் நிரப்ப அமெரிக்க இராணுவத்தால் பயன்படுத்தப்படும் ஒரு முக்கிய தளமாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.


