கரூர் நெரிசல் வழக்கு தொடர்பாக, தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் நாளை (மார்ச் 10) டில்லியில் சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக சிபிஐ அழைப்பாணை அனுப்பியுள்ளது.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் , கடந்த செப்டம்பர் 27ல் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பங்கேற்ற கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்தனர்.
இச்சம்பவம் குறித்து சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
ஏற்கனவே இரண்டு முறை சிபிஐ அதிகாரிகள் அழைப்பாணை அனுப்பி இருந்தனர்.
டில்லி சிபிஐ அலுவலகத்தில், இரண்டு முறை ஆஜராகி சிபிஐ அதிகாரிகளின் கேள்விகளுக்கு விஜய் பதில் அளித்திருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கில் தவெக தலைவர் விஜய் நாளை (மார்ச் 10) ஆஜராக சிபிஐ அழைப்பாணை அனுப்பி உள்ளது.
விஜய் தரப்பில் திகதியை மாற்றுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது.
இதை சிபிஐ ஏற்குமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் சிபிஐ ஏற்காவிட்டால் நாளை விஜய் ஆஜராகி கேள்விகளுக்கு பதில் அளிப்பாரா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


