Tuesday, March 10, 2026
spot_img
Homeஉலக செய்திகள்அமெரிக்கர்களுக்கு அவசர அறிவிப்பு!

அமெரிக்கர்களுக்கு அவசர அறிவிப்பு!

சவுதி அரேபியாவில் உள்ள அவசியமற்ற அரச ஊழியர்களையும், அனைத்து பணியாளர்களின் குடும்ப உறுப்பினர்களையும் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக அங்கிருந்து வெளியேறுமாறு அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த 28 ஆம் திகதி முதல் ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் போரைத் தொடங்கியது.

இந்தநிலையில், சவுதி அரேபியாவிலிருந்து வெளியேறுமாறு அந்த திணைக்களம் கட்டாய உத்தரவு பிறப்பிப்பது இதுவே முதல் முறையாகும்.

சவுதி அரேபியா மீது ஈரான் நடத்தும் தாக்குதல்கள் அதிகரித்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

முன்னதாக, அல்-கர்ஜ் பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டிடம் ஒன்றின் மீது ஏவுகணை விழுந்ததில் குறைந்தது இரண்டு பேர் உயிரிழந்ததாக சவுதி அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் தலைநகர், ஒரு விமான தளம் மற்றும் ஒரு எண்ணெய் குதம் ஆகியவற்றின் மீது நடத்தப்பட்ட பல ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை முறியடித்துள்ளதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments