Sunday, June 7, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்Ceylon Electricity Board மறுசீரமைப்புக்கான வர்த்தமானி!

Ceylon Electricity Board மறுசீரமைப்புக்கான வர்த்தமானி!

இலங்கை மின்சார சபையின் (CEB) செயல்பாடுகள் மற்றும் கடமைகளை எதிர்வரும் மார்ச் 09 முதல் மாற்றும் வகையில் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி ஒரு அசாதாரண வர்த்தமானியை வெளியிட்டுள்ளார்.

மின்சார உற்பத்தி, பரிமாற்றம், விநியோகம் மற்றும் அமைப்பு செயல்பாடுகளுக்காக ஆறு நிறுவனங்களை நிறுவுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவித்தல் தெரிவிக்கிறது.

இதன்படி, 2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இலங்கை மின்சார சபை சட்டத்தின் பல உப பிரிவுகள் திருத்தம் செய்யப்பட்ட வர்த்தமானி வௌியாகியுள்ளது.

மின்சாரத் துறையின் மறுசீரமைப்புக்குத் தேவையான பல முக்கிய ஒழுங்குமுறை மைல்கற்கள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, வர்த்தமானி எண். 2478/41 வெளியிடப்படுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments