Sunday, March 8, 2026
spot_img
Homeஉலக செய்திகள்ட்ரோன் தாக்குதலால் அராம்கோவின் முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடல்!

ட்ரோன் தாக்குதலால் அராம்கோவின் முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடல்!

சனிக்கிழமை தொடங்கிய அமெரிக்க – இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல்களில் நாட்டின் தலைவர் அயதுல்லா அலி கமேனி மற்றும் பல மூத்த ஈரானிய அதிகாரிகள் உயிரிழந்ததைத் தொடர்ந்து ஈரானின் பழிவாங்கல் மத்திய கிழக்கிற்கு பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.

காமெனியின் கொலைக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக, ஈரான் வளைகுடா நாடுகளில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க இராணுவ தளங்களை குறிவைத்து தாக்குதல்களை நடத்தியுள்ளது.

இதன் விளைவாக, பஹ்ரைன், ஜோர்டான், குவைத், கட்டார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவை தொடர்ந்து வான்வழி அச்சுறுத்தல்களையும் ஏவுகணை நடவடிக்கைகளையும் எதிர்கொள்கின்றன.

இதன் ஒரு பகுதியாக சவுதி அரேபியாவின் அரசு எண்ணெய் நிறுவனமான அரம்கோவின் ராஸ் தனுரா சுத்திகரிப்பு நிலையம் திங்களன்று ட்ரோன் தாக்குதலுக்கு உள்ளானதைத் தொடர்ந்து தற்காலிகமாக மூடப்பட்டது,

ட்ரோன் தாக்குதலை அடுத்து நிலயைத்தில் ஏற்பட்ட தீப்பரவலானது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக பெயரிடப்படாத ஆதாரங்களை மேற்கோள் காட்டி ரெய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை, ரியாத்தின் சர்வதேச விமான நிலையம் மற்றும் அமெரிக்கப் படைகளை நடத்தும் பிரின்ஸ் சுல்தான் விமான தளத்தை குறிவைத்து வந்த ஈரானிய ஏவுகணைகளை சவுதி அரேபியா தடுத்து நிறுத்தியதாக வளைகுடா வட்டாரத்தை மேற்கோள் காட்டி AFP செய்தி வெளியிட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments