Wednesday, March 11, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்மட்டக்களப்பில் காட்டுயானை தாக்குதலில் மூதாட்டி ஒருவர் உயிரிழப்பு!

மட்டக்களப்பில் காட்டுயானை தாக்குதலில் மூதாட்டி ஒருவர் உயிரிழப்பு!

மட்டக்களப்பு முனைக்காடு கிராமத்திற்குள் இன்று அதிகாலை காட்டு யானை புகுந்து தாக்கியதில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இரண்டு பெண்கள் காணமடைந்துள்ளனர்.

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ்பிரிவுக்குட்பட்ட முனைக்காடு கிராமத்திற்குள் இன்று அதிகாலை உட்புக்குந்த காட்டு யானை ஒன்று,மக்கள் குடியுருப்பு பிரதேசத்துக்குள் பிரவேசித்து திடீரென மக்களைத் தாக்கியுள்ளது.

அதிகாலை வேளையில் வீட்டில் தனது கடமைகளை நிறைவேற்றிக்கொண்டிருந்த 75 வயதுடைய மூதாட்டி உயிரிழந்துள்ளார்.

மேலும் இரண்டு பெண்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மட்டக்களப்பின் நகரம் கிராமம் என அனைத்து பகுதிகளிலும் யானைகளின் அட்டகாசம் முடிவின்றி தொடர்வதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments