Tuesday, March 10, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருமானம் 1,552 மில்லியன் அமெரிக்க டொலர்கள்!

இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருமானம் 1,552 மில்லியன் அமெரிக்க டொலர்கள்!

2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருமானம் 1,552 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.

இது கடந்த 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 13.7 சதவீத வளர்ச்சியாகும் என சபையின் தலைவர் மங்கள விஜேசிங்க குறிப்பிட்டுள்ளார்.

ஜனவரி மாதத்தின் மொத்த ஏற்றுமதி வருமானமான 1,552 மில்லியன் டொலர்களில்இ வர்த்தகப் பொருட்கள் ஏற்றுமதி மூலம் 1,165 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானம் கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 10.5 சதவீத வளர்ச்சியாகும். அதேவேளை, சேவைத் துறை மூலமான ஏற்றுமதி வருமானம் 367 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதுடன், இது 24.5 சதவீத பாரிய வளர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது.

பொருட்கள் ஏற்றுமதியில் குறிப்பாக தேயிலை, தேங்காய், இறப்பர், உணவு மற்றும் பானங்கள், மின்சாரம் மற்றும் இலத்திரனியல் உபகரணங்கள், மரக்கறிகள், பழங்கள் மற்றும் கடல் உணவு வகைகள் அதிக பங்களிப்பை வழங்கியுள்ளன. சேவைத் துறையைப் பொறுத்தமட்டில் தகவல் தொழில்நுட்பத் துறை முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.

கடந்த ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 2026 ஜனவரியில் நாட்டின் ஏற்றுமதித் துறையின் ஒட்டுமொத்த செயல்திறன் 13.7 சதவீதத்தினால் முன்னேற்றமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments