Tuesday, March 10, 2026
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்சிம்பாப்வே அணியை 107 ஓட்டங்களால் வெற்றி கொண்டு அரை இறுதி வாய்ப்பை உறுதி செய்த மேற்கிந்திய...

சிம்பாப்வே அணியை 107 ஓட்டங்களால் வெற்றி கொண்டு அரை இறுதி வாய்ப்பை உறுதி செய்த மேற்கிந்திய தீவுகள்!

டி-20 உலக் கிண்ண கிரிக்கெட் தொடரின் சுப்பர்-8 சுற்றில் சிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 107 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது.

வங்கடே மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற சிம்பாப்வே அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுக்களை இழந்து 254 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் Shimron Hetmyer அதிகபட்சமாக 85 ஓட்டங்களையும், Rovman Powell 59 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்ததுடன் பந்து வீச்சில் சிம்பாப்வே அணி Richard Ngarava மற்றும் Blessing Muzarabani ஆகியோர் தலா 02 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

பின்னர் 255 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 17.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 147 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தது.

துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் Brad Evans அதிகபட்சமாக 43 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்து வீச்சில் மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் Gudakesh Motie 04 விக்கெட்டுக்களையும் Akeal Hosein 03 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

இன்னிலையில் மேற்கிந்தியத் தீவுகள் அணி பெற்ற இந்த ஓட்ட எண்ணிக்கையானது, இருபதுக்கு 20 உலகக்கிண்ணப் போட்டி வரலாற்றில் ஒரு அணி பெற்ற இரண்டாவது அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையாகக் கருதப்படுகிறது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments