Friday, March 13, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்மஹாராஷ்டிராவில் வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 5 பேர் உயிரிழப்பு 7 பேர் படுகாயம்!

மஹாராஷ்டிராவில் வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 5 பேர் உயிரிழப்பு 7 பேர் படுகாயம்!

மஹாராஷ்டிராவில் பள்ளத்தில் வேன் கவிழ்ந்த விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துடன் மேலும், காயமடைந்த 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தரணி தாலுகாவில் உள்ள ராணிகான் காட் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறுகிய மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலையை விட்டு விலகி, சுமார் 50 முதல் 60 அடி ஆழமுள்ள பள்ளத்தில் விழுந்துள்ளது.

விபத்து நடந்த இடத்திலேயே 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

குறுகிய மலைப்பாதை மற்றும் ஆழமான பள்ளம் என்பதால், மீட்புக்குழுவினருக்கு மீட்புப் பணிகள் பெரும் சவாலாக இருந்தது.

இந்நிலையில் உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் காணும் பணியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை, விபத்துக்கான காரணம் குறித்தும் விசாரித்து வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments