Wednesday, March 11, 2026
spot_img
Homeஉலக செய்திகள்நியூயார்க் நகரை தாக்கிய பனிப்புயல் – வானிலை மையம் எச்சரிக்கை!

நியூயார்க் நகரை தாக்கிய பனிப்புயல் – வானிலை மையம் எச்சரிக்கை!

அமெரிக்கா- நியூயார்க் நகரத்தைத் தாக்கிய கடுமையான பனிப்புயல் காரணமாக, நேற்று இரவு முதல் நகரம் முற்றிலுமாக மூடப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி நகரத்தில் உள்ள அனைத்து நெடுஞ்சாலைகள் மற்றும் ரயில் பாதைகளும் மூடப்பட்டுள்ளதுடன் பேருந்துகள் மற்றும் விமானங்கள் உள்ளிட்ட பொது போக்குவரத்து சேவைகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளன.

ஆபத்தான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அத்தியாவசிய சேவைகள் தவிர, பள்ளிகள் மற்றும் பிற நிறுவனங்கள் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பாதுகாப்புப் படையினர், அத்தியாவசிய சேவைகள் மற்றும் பேரிடர் சேவைகள் தவிர மற்ற வாகனங்கள் நெடுஞ்சாலைகளில் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த பனிப்பொழிவு தரை மட்டத்திலிருந்து சுமார் இரண்டு அடி உயரத்தில் இருக்கும் என்றும், பல ஆண்டுகளுக்குப் பிறகு இதுபோன்ற பனிப்புயல் ஏற்படும் என்றும் நாட்டின் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments