Tuesday, March 10, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

நாட்டில் தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் நாட்டை விட்டு விலகிச் செல்வதன் காரணமாக, தற்போது நிலவும் பலத்த மழை நிலைமை படிப்படியாகக் குறைவடைந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

அத்துடன் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அடிக்கடி மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றதுடன் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் கரையோரப் பிரதேசங்களில் காலை வேளையிலும் மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுகின்றது.

மேலும் மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments