Tuesday, March 10, 2026
spot_img
Homeஉலக செய்திகள்பிரான்ஸ் பனிச்சரிவில் சிக்கி இரண்டு பிரிட்டிஷ் நபர்கள் உயிரிழப்பு!

பிரான்ஸ் பனிச்சரிவில் சிக்கி இரண்டு பிரிட்டிஷ் நபர்கள் உயிரிழப்பு!

கடந்த வாரம் பிரான்சின் ஆல்ப்ஸ் ஸ்கை ரிசார்ட்டில் ஏற்பட்ட பனிச்சரிவில் உயிரிழந்த இரண்டு பிரிட்டிஷ் பனிச்சறுக்கு வீரர்ளின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன.

தென்கிழக்கு பிரான்சில் உள்ள பிரபலமான பனிச்சறுக்கு சுற்றுலா நகரமான வால்-தி-சேரில் ஏற்பட்ட இந்த பனிச்சரிவில் உயிரிழந்த மூன்று பேரில் ஸ்டூவர்ட் லெஸ்லி மற்றும் ஷான் ஓவரி ஆகியோர் பிரிட்டிஷ் பிரஜைகள் ஆவார்.

உயிரிழந்த மற்றைய நபர் பிரான்ஸ் நாட்டவர் என அதிகாரிகள் உறுதிபடுத்தியுள்ளனர்.

இந்த துயரச் சம்பவம் நடப்பதற்கு ஒரு நாள் முன்னதாக பிரான்சின் தேசிய வானிலை முன்னறிவிப்பாளர்கள் இத்தாலியின் எல்லையை ஒட்டிய சவோய் பகுதிக்கு சிவப்பு பனிச்சரிவு எச்சரிக்கையை வெளியிட்டிருந்ததுடன், பனிச்சறுக்கு வீரர்களும், சாகச வீரர்களும் அவதானத்துடன் இருக்குமாறும் அறிவுறுத்தியிருந்தது.

இதேவேளை, பிரிட்டிஷ் பிரஜைகளின் இறப்புகளை இங்கிலாந்து வெளியுறவு அலுவலகமும் உறுதிப்படுத்தியுள்ளது.

சம்பவத்தை தொடர்ந்து நாங்கள் பிரான்ஸ் அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளதாகவும், மேலும் தூதரக உதவியை வழங்க தயாராக இருக்கிறோம் என்றும் கூறியது.

பிரெஞ்சு ஆல்ப்ஸ் ரிசார்ட்டில் ஏற்பட்ட பனிச்சரிவில் மற்றொரு பிரித்தானிய பனிச்சருக்கு வீரர் உயிரிழந்த ஒரு மாதத்திற்குப் பின்னர் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments