இச் சம்பவம் நேற்று 21 ம் திகதி இரவு சாமி மலை பகுதியில் உள்ள ஸ்ரஸ்பி தோட்ட தெய்வகந்தை பிரிவில் உள்ள வன பகுதியில் இடம் பெற்று உள்ளது.
மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ் .எஸ் . புஷ்பகுமார வேண்டுகோளுக்கு இணங்க மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொலிசார் நேற்று இரவு இந்த சுற்றிவலைப்பை மேற் கொண்டனர்.
ஸ்ரஸ்பி தோட்ட தெய்வகந்தை பிரிவில் உள்ள வனப் பகுதியில் நேற்று 21 ம் திகதி இரவு சுற்றிவலைப்பின் போது சட்ட விரோதமாக 210 லீட்டர் சட்டவிரோதமாக காய்ச்சபட்ட நிலையில் இருந்த கசிப்புடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார் என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எஸ்.புஸ்பகுமார தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில் கை பற்ற பட்ட கசிப்பை நாசப்படுத்தியதுடன் சந்தேக நபரை பொலிஸ் பிணையில் விடுதலை செய்யபட்டு எதிர் வரும் புதன் கிழமை 28 ம் திகதி ஹட்டன் நீதிமன்றத்தில் முன் நிலையாகுமாறு பணித்துள்ளார்.
மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் இனி வரும் காலங்களில் போதைப் பொருள் இல்லாத பிரதேசமாக உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.


