யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று வடக்கு பகுதியில் கஞ்சாவுடன் கைதான நபருக்கு மூன்று நாட்கள் தடுப்பு காவலின் பின் நீதிமன்றம் விளக்கமறியல் உத்தரவு பிறப்பித்துள்ளது
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்
நெல்லியடி விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப் பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில் செம்பியன் பற்று வடக்கு பகுதியில் பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று கடந்த 9-1-2026 அன்று விசேட அதிரடிப்படையால் திடீர் சுற்றிவளைப்பு செய்யப்பட்டது
முச்சக்கர வண்டி சாரதியை கைது செய்து முச்சக்கர வண்டியை சோதனை செய்தபோது அதிலிருந்து 2Kg கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது.
கைது செய்யப்பட்ட நபர் செம்பியன்பற்று வடக்கை சேர்ந்த 19 வயது இளைஞன் எனப்படுவதோடு கைது செய்யப்பட்ட நபரும் கேரளா கஞ்சாவும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மருதங்கேணி பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டு கடந்த 10-1-2026 மருதங்கேணி பொலிசாரால் நீதிமன்றத்தில் கைதான நபர் முற்படுத்தப்பட்டு மேலும் நான்கு நாட்கள் பொலிஸ் காவலில் தடுத்துவைத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டது.
விசாரணையின் பின்னர் சந்தேக நபர் மருதங்கேணி பொலிசாரால் இன்றைய(13)தினம் கிளிநொச்சி நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டவேளை குறித்த நபரை விளக்கமறியலில்வைத்து கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது
மீண்டும் நாளைய(14) தினம் வழக்கு நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.


