பிரிட்டிஸ் பிரதமரை பதவியிலிருந்து நீக்குவது குறித்து எலொன்மஸ்க் சமீபத்தில் தனது சகாக்களுடன் ஆராய்ந்தார் என பினான்சியல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
மேற்குல நாகரீகம் அச்சுறுத்தலிற்குள்ளாகியுள்ளது என மஸ்க் கருதுகின்றார் என இந்த பேச்சுவார்த்தைகள் குறித்து நன்கறிந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
டொனால்ட் டிரம்பின் ஆட்சிக்காலத்தில் மிகமுக்கியமானவராக திகழும் எலொன் மஸ்க் பிரிட்டிஸ் பிரதமரையும் அவரர் இடதுசாரி அரசாங்கத்தையும் கடுமையாக விமர்சித்துவருகின்றார்.
பிரிட்டனின் தொழில்கட்சியின் தலைமை பதவியிலிருந்து சேர் கெய்ர் ஸ்டாமெரை நீக்கவேண்டும் அல்லது பிரிட்டன் புதிய தேர்தலிற்கு செல்லவேண்டும் என எலொன் மஸ்க் சமீபத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.