Tuesday, March 10, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்மருதங்கேணி பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது..!

மருதங்கேணி பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது..!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் நேற்றைய தினம் (11) ஞாயிற்றுக்கிழமை சந்தேக நபர் ஒருவர் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

மருதங்கேணி பொலிசார்க்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மருதங்கேணி கடற்கரையில் சுற்றி வளைக்கப்பட்டு தேடுதல் மேற்கொள்ளபட்டபோது மீன்வாடி ஒன்றில் தங்கி இருந்து கடற்தொழில் செய்யும் மன்னார் பேசாலை பகுதியை சேர்ந்த சுதர்சன எனும் 39 வயதுடைய நபரின் உடமையில் இருந்து 4.790g ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது

கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும், ஐஸ் போதைப் பொருளையும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக நீதி மன்றில் நேற்றைய தினம் மருதங்கேணி பொலிசாரால் முற்படுத்தப்டு சந்தேக நபரை தடுத்துவைத்து விசாரணை செய்ய மருதங்கேணி பொலிசார் நீதிமன்றில் அனுமதி கோரிய நிலையில் மேலும் மூன்று நாட்கள் குறித்த சந்தேக நபரை பொலிஸ் காவலில் தடுத்துவைத்து விசாரணை செய்ய கிளிநொச்சி நீதிமன்ற நீதிவான் அனுமதி வழங்கியுள்ளது

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments