Tuesday, March 10, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்கேரள கஞ்சாவுடன் இளைஞர் கைது!

கேரள கஞ்சாவுடன் இளைஞர் கைது!

வடமராட்சி நிருபர்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று வடக்கு பகுதியில் கேரளா கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

நெல்லியடி விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப் பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில் செம்பியன் பற்று வடக்கு பகுதியில் பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று விசேட அதிரடிப்படையால் திடீர் சுற்றிவளைப்பு செய்யப்பட்டது

முச்சக்கர வண்டி சாரதியை கைது செய்து முச்சக்கர வண்டியை சோதனை செய்தபோது அதிலிருந்து 2Kg கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது.

கைது செய்யப்பட்ட நபர் செம்பியன்பற்று வடக்கை சேர்ந்த 19 வயது இளைஞன் எனப்படுவதோடு கைது செய்யப்பட்ட நபரும் கேரளா கஞ்சாவும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மருதங்கேணி பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments