கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் 44வது படத்தின் டைட்டில் ‘ரெட்ரோ’ என்று சமீபத்தில் அறிவித்தார்கள். அதையடுத்து தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் தனது 45வது படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ‘மௌனம் பேசியதே, ஆறு’ படங்களுக்கு பிறகு மீண்டும் திரிஷா நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது இந்த படத்திற்கு ‘பேட்டைக்காரன்’ என்ற டைட்டில் வைக்க ஆர்.ஜே. பாலாஜி திட்டமிட்டிருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் பொங்கலுக்கு வழியாக உள்ள நிலையில் அப்போது டைட்டிலும் அறிவிக்கப்படும் என்று தெரிய வந்துள்ளது. ஏற்கனவே ரஜினி ‘பேட்ட’ என்ற படத்திலும், விஜய் ‘வேட்டைக்காரன்’ என்ற படத்திலும் நடித்துள்ள நிலையில் தற்போது சூர்யா படத்துக்கோ ‘பேட்டைக்காரன்’ என்று டைட்டில் வைத்துள்ளார்கள்.