Wednesday, March 11, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்முன்னாள் இராஜாங்க அமைச்சர் லக்கி ஜயவர்தன காலமானார்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லக்கி ஜயவர்தன காலமானார்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லக்கி ஜயவர்தன வயது 71 ஆவது வயதில் இன்று புதன்கிழமை (08) காலமானார்.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் இவர் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி இராஜாங்க அமைச்சராக கடமையாற்றியுள்ளார்.

கண்டி மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ஜயவர்தன, 1988ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாவது மாகாண சபைத் தேர்தலுடன் தனது அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்தார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது அவர் ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளித்தார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments