நல்லதண்ணி நகரம் மற்றும் நல்லதண்ணி – சிவனொளிபாத மலை பிரதான வீதியில் குரங்குகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக, அங்கு வருகை தரும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் அசௌகரியங்களுக்கு உள்ளாகுவதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதிகளில் சுமார் 20 முதல் 30 குரங்குகள் கூட்டம் கூட்டமாகத் திரிவதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த குரங்குகள் நல்லதண்ணி நகரத்தில் உள்ள ஹோட்டல்களுக்குள் உள்நுழைந்து உணவு வகைகளைத் திருடிச் செல்வதாக ஹோட்டல் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.