Thursday, March 12, 2026
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்சென்மேரிஸ் விளையாட்டுக் கழகத்தின் உதைபந்தாட்ட போட்டி ஆரம்பம்;

சென்மேரிஸ் விளையாட்டுக் கழகத்தின் உதைபந்தாட்ட போட்டி ஆரம்பம்;

நமது நிருபர்

வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு சென்மேரிஸ் விளையாட்டு கழகம் வடந்தோறும் நடத்தும் கே எஸ் பி எல்-4 உள்ளூர் உதைபந்தாட்ட தொடரின் ஆரம்பப் போட்டி இன்று நடைபெற்றது

வடமராட்சி கிழக்கு கழகங்களுக்கு உட்பட்ட வீரர்களை உள்ளடக்கி அவர்களின் திறமையை மேலும் ஊக்கப்படுத்துவதற்காக வருடாந்தோறும் இந்த விளையாட்டு நிகழ்வு சென்மேரிஸ் விளையாட்டுக் கழகத்தால் நடாத்தப்படுகின்றது.

அதனடிப்படையில் தொடரின் ஆரம்ப நிகழ்வு மங்கள விளக்கேற்றப்பட்டு இன்று சென்மேரிஸ் மைதானத்தில் ஆரம்பமானது

கே எஸ் பி எல் 4 உள்ளூர் உதைபந்தாட்ட ஆரம்பப் போட்டியில் சஞ்சய் எப் சி அணியை எதிர்த்து பைட்டர் கிங்ஸ் மோதியது

போட்டியின் இறுதியில் பைட்டர் கிங்ஸ் அணி 2-0 என்னும் கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments