சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இதுவரை எந்தவொரு பந்துவீச்சாளரும் செய்யாத சாதனையை பூட்டானை சேர்ந்த 22 வயது சுழற்பந்து வீச்சாளர் சோனம் யேஷே நிகழ்த்தியுள்ளார்.
இதன்படி சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியொன்றில் 8 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
மியான்மார் அணிக்கு எதிராக நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் அவர் குறித்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
சோனம் யேஷே தான் வீசிய 4 ஓவர்களில் வெறும் 7 ஓட்டங்களை மட்டுமே வழங்கி 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
முதலில் துடுப்பெடுத்தாடிய பூட்டான் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 127 ஓட்டங்களைப் பெற்றது.
இதனையடுத்து 128 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய மியான்மார் அணி சோனம் யேஷேயின் சுழலில் சிக்கி வெறும் 45 ஓட்டங்களுக்குள் வீழ்ந்தது.
ஜூலை 2022 இல் மலேசியாவுக்கு எதிரான போட்டியில் அறிமுகமான சோனம் யேஷே,இதுவரை 34 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் சுமார் 37 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


