இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறிப் பிரவேசித்து, கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய கடற்றொழிலாளர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்திய கடற்றொழிலாளர்களின் படகு ஒன்றும் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் தற்போது காரைநகர் கடற்படை தளத்துக்கு அழைத்து வரப்பட்டு ஆரம்பக்கட்ட விசாரணைகளின் பின்னர், மேலதிக சட்ட நடவடிக்கைக்காக மயிலிட்டி பிராந்தியத்துக்கான கடற்றொழில் பரிசோதகர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையின் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.


