Wednesday, March 18, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்பாரிய குற்றவாளியின் உதவியாளர் கைது!

பாரிய குற்றவாளியின் உதவியாளர் கைது!

வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள பாரிய போதைப்பொருள் கடத்தல்காரரும், திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுபவருமான ‘ஹீனட்டியன மகேஷின் உதவியாளரான ஜிங்கா என்றழைக்கப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட விசாரணையின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் இருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத் துப்பாக்கி ஒன்றும், அதன் மெகஸினும், T56 ரகத் தோட்டாக்கள் 25தும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் குறித்து மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments