Wednesday, March 18, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்மருதங்கேணி வைத்தியசாலைக்கு விஜயம் செய்த வேந்தன்

மருதங்கேணி வைத்தியசாலைக்கு விஜயம் செய்த வேந்தன்

நமது நிருபர்

யாழ் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச வைத்தியசாலை பல குறைபாடுகளை கொண்டதாக இருந்த போதும் கடந்த சில நாட்களுக்கு முன் வடமராட்சி கிழக்கு பிரதேச அபிவிருத்தி குழு தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரஜீபன் வருகை தந்து குறைகளை பார்வையிட்டு அதனை நிவர்த்தி செய்து தருவதாக கூறி சென்றார்

அதனை தொடர்ந்து ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இணைத் தலைவரும் ஜனநாயக போராளிகள் கட்சி தலைவருமான வேந்தன் மருதங்கேணி பிரதேச வைத்தியசாலைக்கு விஜயம் செய்து குறைகளை பார்வையிட்டதுடன்

வைத்தியசாலை வளாகம் அதிகளவு நீர் தேங்கி நிற்பதாகவும் அதனால் வைத்தியசாலை சமூகம் பல பிரச்சனைகளை எதிர் நோக்குவதாகவும் கூறியதை தொடர்ந்து
உடனடியாக புளூஸ் அறக்கட்டளை கனடா உதவியுடன் நீர் தேங்கி நிற்கும் இடங்களை மண் பரப்புவதற்காக ரூபா 60 000 கொடுக்கப்பட்டது

அதனை தொடர்ந்து வைத்தியசாலைக்கு தற்போது தேவைகள் தொடர்பாக அறிக்கை ஒன்று பெறப்பட்டு அதனை கட்டம் கட்டமாக நிவர்த்தி செய்து தருவதாகவும் கூறிச்சென்றார்

இவ் சந்திப்பில் ஜனநாயக போராளிகள் கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் பருத்துறை பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments