இலங்கையின் 25 வது இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ பதவி ஏற்பின் பின் கண்டி ஶ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம் செய்து வழிபாடுகளில் ஈடுபட்டு ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டார்.
இந்த விஜயம் இன்று திங்கட்கிழமை (06) இடம்பெற்றது.
தலதா மாளிகையின் தியவடன நிலதே பிரதீப் நிலங்க தேல அவரை வரவேற்றார்.
அதேநேரம் ஶ்ரீ தலதா மாளிகைக்கு வழிபாட்டிற்காக வருகை தந்திருந்த வௌிநாட்டு யுவதி ஒருவர் இராணுவத் தளபதி சல்யூட் அடித்து மரியாதை தெரிவித்து அங்கு குழுமி இருந்தவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.