Monday, March 16, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்குற்றவாளிகளை தேடி பொலிசார் தொடர் சுற்றிவளைப்பு

குற்றவாளிகளை தேடி பொலிசார் தொடர் சுற்றிவளைப்பு

நமது நிருபர்

வடமராட்சி கிழக்கு  கட்டைக்காடு கிழக்கில் மருதங்கேணி பொலிசாரால் குற்றவாளிகளை தேடி தொடர் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது

சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

கடந்த ஞாயிற்றுக் கிழமை வன்முறைக் கும்பல் ஒன்று கட்டைக்காடு கிழக்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது தடிகள்,கற்கள்,கூரிய ஆயுதங்களால் கொலைவெறித் தாக்குதல் மேற்கொண்டன

இந்த தாக்குதலில் வீட்டில் காணப்பட்ட வாகனம்,உழவு இயந்திரங்கள்,வீட்டு தளபாடங்கள், சிசிரிவி கேமரா உட்பட பெறுமதியான பொருட்கள் அடித்து நொருக்கப்பட்டன

சிசிரிவி ஆதாரங்களை கொண்டு மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டதன் பிரகாரம் பொலிசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்

இந்நிலையில் இன்று காலையில் இருந்து கட்டைக்காடு கிழக்கு பகுதி பொலிசாரின் சுற்றிவளைப்பில் காணப்படுகின்ற வேளையும் குற்றவாளிகளை கைது செய்ய முடியவில்லை

குற்றவாளிகள் வேறு இடங்களில் பதுங்கியிருப்பதாகவும் விரைவில் அவர்களை கைது செய்வோமென பொலிசார் தெரிவித்துள்ளனர்

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments