நமது நிருபர்
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தின் முக்கிய ஆவணங்கள் களவு போய் உள்ளது.
கடந்த 13 ஆம் திகதி கடற்தொழில் அமைச்சர் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டிற்கு வருகை தந்த வேளை காணாமல் போனதாக கூறப்படும் சங்கத்தினுடைய ஆவணங்கள் தொடர்பில் மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது
கட்டைக்காட்டிற்கு வருகை தந்த கடற் தொழில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரனை சந்திப்பதற்காக சங்க உறுப்பினர்கள் வருகை தந்த வேளையே குறித்த ஆவணம் களவு போய் உள்ளது.
சங்கத்தினுடைய ஆவணம் களவு போனமை தொடர்பாக சங்கத் தலைவர் செபஸ்ரியனிடம் கேள்வி எழுப்பப்பட்டது
அமைச்சரைச் சந்திப்பதற்காக வந்த வேளை செயலாளரால் அந்த ஆவணம் தவறவிடப்பட்டதாகவும் அதன் பின்பு மருதங்கேணி பொலிசில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.குறித்த ஆவணம் நிர்வாகத்தால் மறைத்து வைக்கப்படவில்லை என்றும் உண்மையில் அது களவு போனதாகவும் தெரிவித்தார்
ஆவணத்தை தவற விட்டிருந்தவர் செயலாளர் ஆனால் மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்தவர் உபசெயலாளர் தொடர்பிலும் கேள்வி எழுப்பப்பட்டது
இதன் போது கருத்து தெரிவித்த மீன் பிடிச்சங்க தலைவர் செபஸ்ரியன் செயலாளரைத்தான் முறைப்பாடு பதிவு செய்யுமாறு பணித்ததாகவும் உபசெயலாளர் மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் அளித்திருப்பது தனக்கு தெரியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்
அதிக நிதிவளம் கொண்ட கட்டைக்காடு மீன்பிடி சங்கத்தில் முக்கிய ஆவணங்கள் களவு போனதாக கூறப்படுவது அப்பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது


