Sunday, June 7, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்பொதுமகனுக்கு கொலை மிரட்டல் விட்ட கிராம உத்தியோகத்தர்

பொதுமகனுக்கு கொலை மிரட்டல் விட்ட கிராம உத்தியோகத்தர்

நமது நிருபர்

கடந்த சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட அனர்த்தத்தின் போது இலங்கையின் பல்வேறு பகுதிகள் முற்றாக பாதிக்கப்பட்டது

அதன் அடிப்படையில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அதிகம் பாதிக்கப்பட்ட இடங்களில் முதன்மையாக நாகர் கோவில் பகுதி காணப்படுகிறது.

இவ் கிராமத்தில் பணி புரியும் கிராம உத்தியோகத்தர் பக்க சார்பாக செயற்படுவதாகவும் சில பாதிக்கப்பட்ட வீடுகளை இது வரைக்கும் கிராம உத்தியோகத்தர் வந்து பார்வையிட வில்லை எனவும் நாகர் கோவில் மக்கள் அண்மையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளனர்

கருத்து தெரிவித்த நபருக்கு தொலைபேசி அழைப்பு மூலம் ஊடகங்களுக்கு கொடுத்த கருத்தினை மறுபடியும் வாங்கும் மாறும் இல்லை என்றால் ஆள் வைத்து கொலை செய்ததாகவும் கொலைமிரட்டல் விடப்பட்டுள்ளது என பாதிக்கப்பட்ட நபர் கூறியுள்ளார்

இச் சம்பவம் தொடர்பாக மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையில் மேலதிக விசாரணைகளை மருதங்கேணி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments