ராம் சரண் நடிப்பில் ஷங்கர் இயக்கி உள்ள கேம் சேஞ்சர் படம் பொங்கலுக்கு திரைக்கு வருவதால் கடந்த சில வாரங்களாக இப்படத்தின் பிரமோசன் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஐதராபாத்தில் நடைபெற்ற இப்படத்தின் நிகழ்ச்சியில் இயக்குனர் ராஜமவுலியும் கலந்து கொண்டார். அப்போது அந்த மேடையில், ஷங்கர், ராம்சரண், தயாரிப்பாளர் தில் ராஜு முன்னிலையில் ராஜமவுலி பேசும் போது, பிரம்மாண்ட படங்களை எடுக்க நான்தான் இன்ஸ்பிரேஷனாக இருப்பதாக பலரும் சொல்கிறார்கள். ஆனால் நான் உதவி இயக்குனராக இருந்த காலத்திலேயே எங்களுக்கெல்லாம் பெரிய இன்ஸ்பிரேஷனே இயக்குனர் ஷங்கர் தான். பிரம்மாண்ட படங்கள் எடுத்தால் மக்கள் தியேட்டருக்கு படை எடுப்பார்கள் என்று அவர்தான் எங்களுக்கு ஒரு நம்பிக்கையை கொடுத்தார். அந்த வகையில் பிரமாண்டமான படங்களை இயக்குவதற்கு எனக்கு அவர்தான் பெரிய இன்ஸ்பிரேஷனாக இருந்து வருகிறார் என்றார் ராஜமவுலி.
இயக்குனர் ஷங்கர் தான் எனது இன்ஸ்பிரேஷன் : ராஜமவுலி
RELATED ARTICLES
Recent Comments
Hello world!
on