விடாமுயற்சி, குட் பேட் அக்லி என்ற இரண்டு படங்களில் அஜித்குமார் நடித்துள்ளார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அவர் நடித்திருக்கும் குட் பேட் அக்லி படம் வருகிற ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டு தினத்தில் திரைக்கு வருகிறது. இதை அப்படத்தின் ரிலீஸ் உரிமையை பெற்றுள்ள ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் உறுதிப்படுத்தி இருக்கிறார்.
இந்த நேரத்தில் ராயன் படத்திற்கு பிறகு, தான் இயக்கி நடித்து வரும் இட்லி கடை படத்தை ஏப்ரல் பத்தாம் தேதி வெளியிடுவதாக ஏற்கனவே அறிவித்திருக்கிறார் தனுஷ். அதன் காரணமாக ஏப்ரல் பத்தாம் தேதி அஜித்தின் குட் பேட் அக்லி, தனுஷின் இட்லி கடை என்ற இரண்டு படங்களும் திரைக்கு வருவது உறுதியாகி இருக்கிறது.