நமது நிருபர்
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதிகளில் பலத்த மழை தொடர்ச்சியாக பெய்து வருகிறது
இதன் காரணமாக அண்மைக்காலமாக அனுமதி மற்றும் அனுமதியற்ற மணல் அகழப்பட்ட இடங்கள் தற்போது மேலும் பாதிப்படைந்து காணப்படுகின்றது.
குறித்த இடங்களில் அதிகளவான நீர் தேங்கி நுளம்புகள் பெருகிக் காணப்படுகின்றன
இதனால் டெங்கு போன்ற நோய்கள் குடியிருப்புகளில் பரவுவதற்கான அறிகுறிகள் காணப்படுகின்றது
இயற்கை வளங்கள் வெகு விரைவாக அளிக்கப்படுவதால் இயற்கை அனர்த்தங்களில் இருந்து மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்ட வருகிறார்கள்
இந்த நிலையில் கட்டைக்காடு ,வெற்றிலை கேணி, ஆழியவளை பகுதிகளில் மணல் அகழப்பட்ட இடங்கள் பாரிய குன்றும் குழியும் ஆக காணப்படுவதால் அதில் அதிகளவான நீர் தேங்கி காணப்படுகிறது
இயற்கை அனர்த்தங்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று சொன்னால் அரசாங்கம் சட்டவிரோதமாக வளங்களை அழிப்பவர்களை கைது செய்ய வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.




