கற்பிட்டி, பத்தலன்கடுவ தீவுக்கு அப்பாலுள்ள கடற்பகுதியில் 11 கிலோ 300 கிராம் தங்கத்தை கடத்திச் சென்ற மூன்று சந்தேக நபர்கள் இன்று சனிக்கிழமை (04) கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
இலங்கை கடற்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் அடிப்படையில் பத்தலங்குண்டுவ பகுதிக்கு அண்மையில் உள்ள கடற்பரப்பில் வைத்து இச்சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூவரும் கற்பிட்டி பிரதேசத்தை சேர்ந்தவர்களாவர்.
சந்தேக நபர்கள் மூவரும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்க திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.