நமது நிருபர்
யாழ்ப்பாணம் வடமராட்சி வடக்கு கற்கோவளம் பகுதியில் அண்மைய அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எல்லங்குளம் இராணுவத்தினரால் சமைத்த உணவு இன்று காலை வழங்கப்பட்டுள்ளது.
எல்லங்குளம் இராணுவ அதிகாரி மேஜர் HNBC பண்டார தலமையிலான இராணுவ அதிகாரிகள் கற்கோவளம் பகுதிக்கு நேரடியாக சென்று உணவுப்பொதிகளை வழங்கி வைத்தார். இதில் கற்கோவளம் கிராம சேவகர் சிவாஜினியும் பங்கேற்றிருந்தார்.




