யக்கல மற்றும் திஹாரியவிற்கு இடையிலான ஆயுர்வேத மருத்துவமனைக்கு அருகிலுள்ள பாலத்தின் நடுப்பகுதி தாழிறங்கியுள்ளது.
யக்கல பகுதியிலிருந்து கண்டி – கொழும்பு பிரதான வீதி இன்று காலை மூடப்பட்டது.
இதற்கமைய காவல்துறை மாற்றுப் பாதையை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
இதன்படி, யக்கல பகுதியிலிருந்து தெற்கு நோக்கித் திரும்பி நெல்லிகஹமுல வழியாக திஹாரியவிற்குள் நுழைந்து கொழும்பு – கண்டி பிரதான வீதிக்கு நுழைய வேண்டும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.


