Thursday, March 12, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்மன்னார் மாவட்டத்தில் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட கால்நடைகள்

மன்னார் மாவட்டத்தில் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட கால்நடைகள்

மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்ட காற்றுடன் கூடிய மழை காரணமாகவும்,ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாகவும் மாவட்டத்தின் பல பாகங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான கால்நடைகள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.

நானாட்டான்,மடு, மாந்தை மேற்கு மற்றும் ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் ஆடு மற்றும் மாடு உள்ளடங்களாக ஆயிரக்கணக்கான கால்நடைகள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.

குறிப்பாக நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஆயிரக்கணக்கான கால்நடைகள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக கால்நடை வளர்ப்பாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

எனினும் அவர்களினால் இயன்ற அளவிற்கு வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட கால் நடைகளை காப்பாற்றி படகில் ஏற்றி கரைக்கு கொண்டு வந்து காப்பாற்றி உள்ளனர்.

மேலும் மன்னார் மாவட்டத்தின் பல பாகங்களில் வெள்ள நீர் தேங்கி நிற்பதோடு பிரதான பாதைகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது.

இதனால் மன்னார்-யாழ்ப்பாணம் பிரதான வீதி,மன்னார் மதவாச்சி பிரதான வீதிகளின் போக்குவரத்துக்கள் தடைப்பட்டுள்ளது.மேலும் மடு,மாந்தை மேற்கு,நானாட்டான்,முசலி பகுதிகளுக்கான முக்கிய உள்ளக வீதிகளும் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது. இதனால் மக்களின் போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் மக்களின் தொடர்புகள் இல்லாத நிலையில் மரங்களிலும்,கூரைகளிலும் தஞ்சமடைந்துள்ளவர்களை வானூர்தி மூலம் மீட்கும் பணி இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை முன்னெடுக்கப் படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments