Thursday, March 12, 2026
spot_img
Homeசினிமா செய்திகள்சிம்புவுடன் இணையும் விஜய் சேதுபதி

சிம்புவுடன் இணையும் விஜய் சேதுபதி

நடிகர் சிம்புவின் ‘அரசன்’ படத்தில் நடிகர் விஜய் சேதுபதி இணைந்துள்ளார். இந்த படத்தினை பிரபல இயக்குனர் வெற்றி மாறன் இயக்கி வருகிறார்.
இந்தபடம் வடசென்னை பின்னணியில் கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

இந்த படத்தில் சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா, இயக்குனர் நெல்சன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார்.

சமீபத்தில் இந்த படத்தின் புரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில், இப்படத்தில் விஜய் சேதுபதி இணைந்திருப்பது எதிர்பார்ப்பை மேலும்
அதிகரித்துள்ளது. விஜய் சேதுபதி முன்பு வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை 1, 2 படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments