Thursday, March 12, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்ஐஸ் போதைப் பொருளுடன் வடமராட்சி கிழக்கில் ஒருவர் கைது..!

ஐஸ் போதைப் பொருளுடன் வடமராட்சி கிழக்கில் ஒருவர் கைது..!

நமது நிருபர்

யாழ் வடமராட்சி கிழக்கு மாமுனையில் பகுதியில் நேற்றிரவு 10 மணியளவில் விசேட அதிரடிப் படையினர் மாமுனை கிராமத்தில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் ஐஸ் போதைப்பொருள் 7.5 கிராமுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை சிறப்பு அதிரடி படையினர் மருதங்கேணி பொலீஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். குறித்த சந்தேக நபரை கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றத்தில் இன்றைய தினம் (19) முன்னிலப்படுத்தப்பட்ட நிலையில் அவரை தடுப்புக் காவலில் வைத்து மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments