Wednesday, March 11, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்கசிப்பு வியாபாரி மருதங்கேணி பொலிசாரின் சுற்றிவளைப்பில் கைது!

கசிப்பு வியாபாரி மருதங்கேணி பொலிசாரின் சுற்றிவளைப்பில் கைது!

வடமராட்சி கிழக்கு வெற்றிலைகேணியில் பல வருடங்களாக கசிப்பு தொழிலை மேற்கொண்டு பல குடும்பங்களை சீரழித்து வந்த வெற்றிலைக்கேணி பகுதியை சேர்ந்த கசிப்பு வியாபாரி ஒருவர் மருதங்கேணி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெற்றிலைக்கேணி சுடலை அடி பகுதியில் மறைமுகமாக கசிப்பு வியாபாரம் மேற்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் மருதங்கேணி பொலிசாரால் சுற்றிவளைக்கப்பட்டு இன்று(16) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்

இவர் பல வருடங்களாக சட்டவிரோதமாக மேற்கொண்டுவரும் கசிப்பு தொழிலால் இதுவரை பல்வேறு குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளதுடன் பல குடும்பங்கள் பிரிந்து வாழ்கின்றன என குற்றச்சாட்டு எழுந்த நிலையில் பொலிசாரால் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கசிப்புடன் கைது செய்யப்பட்ட நபர் மருதங்கேணி பொலிசாரால் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments