Saturday, March 14, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்அரச பேருந்து இல்லாமல் மக்கள் அவதி!

அரச பேருந்து இல்லாமல் மக்கள் அவதி!

மஸ்கெலியா மறே அரச பேருந்து கடந்த ஒரு மாதமாக சேவையில் இல்லை. அந்த சாலை ஊடாக ஒரே ஒரு அரச பேருந்து சேவையில் ஈடுபட்டு வந்த போதும் கடந்த ஒரு மாதமாக அந்த பேருந்து சேவையில் இருந்து இடை நிறுத்தம் செய்ய பட்டு உள்ளது.

இதனால் மறே பகுதியில் உள்ள 14 தோட்ட பிரிவில் உள்ள மக்கள் மற்றும் நல்லதண்ணி ரிக்கார்டன் நகர கிராமங்களை சேர்ந்த பாடசாலை மாணவர்கள் பயணிகள் நோயாளிகள் அரச உத்தியோகத்தர்கள் ஆசிரியர்கள் பருவகால சீட்டினை பெற்று தனியார் பேருந்துகளில் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து ஹட்டன் அரச பேருந்து நிலைய பொறுப்பதிகாரியிடம் கேட்ட போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த மாதம் அந்த பேருந்து சாரதி நல்லதண்ணி பொலிசாரால் ஹேரோயின் மற்றும் போதை வில்லைகள் வைத்து இருந்த குற்றசாட்டில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.
அதன் பின்னர் அந்த பேருந்து சாரதிக்கு மாறாக சாரதி ஒருவர் இல்லாத காரணத்தால் அந்த பேருந்து சேவை இடை நிறுத்தம் செய்யபட்டு உள்ளது என கூறினார்.

இந்த பேருந்து சேவையை மீண்டும் இயக்க நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் போக்குவரத்து அமைச்சர் முன் வர வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments